search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executives petition"

    • புதுவை மாநில காங்கிரசில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
    • சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரசில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தனர்.

    அப்போது புதுவை மாநிலத்தில் காங்கிரசை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, ரகுமான், சிவசண்முகம், ஓ.பி.சி. அணி தலைவர் கண்ணன், செயலாளர்கள் சரவணன், பி.எம்.சரவணன், சூசைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகள் விருப்பமனு வழங்கினர்.
    • தேர்தல் ஆணையாளர், தெற்குமாவட்ட செயலாளர் ஆகியோரிடம் மனுக்களை கொடுத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. திருமங்கலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, திருப்பரங்குன்றம் கிழக்கு, மேற்கு, தெற்கு, கள்ளிக்குடி வடக்கு, தெற்கு, டி.கல்லுப்பட்டி கிழக்கு, வடக்கு, தெற்கு, செல்லம்பட்டி வடக்கு, தெற்கு, உசிலம்பட்டி வடக்கு, தெற்கு, சேடபட்டி மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய ஒன்றியங்களில் போட்டியிடும் கட்சியினர் மனுக்களை பெற்றனர்.

    நேற்று விருப்ப மனுக்களை இந்த ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க.வினர் கொடுத்தனர். தேர்தல் ஆணையாளர் குத்தாலம் அன்பழகன், தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோரிடம் மனுக்களை கொடுத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஜெயசந்திரன், வேட்டையன், தெற்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், அணிஅமைப்பாளர்கள் சிவக்குமார், தனுஷ்கோடி, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, வசந்தாசரவணபாண்டி, ஜெயராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், தொண்டரணி அமைப்பாளர் ஆலம்பட்டி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×