என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "express bus"
- தட்டார்மடம், மணிநகர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பட்டதாரிகள் உள்ளிட்டோர் கரூருக்கு சென்று வர சாத்தான்குளத்தில் இருந்து விரைவு பேருந்து வசதி இல்லை.
- இப்பகுதி பொதுமக்கள் கரூர் பகுதியில் வியாபார கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான தோப்பு வளம், சுப்பிரமணியபுரம், முதலூர், போலையர்புரம், பொத்தகாளான் விலை, பண்டாரபுரம், புதுக்குளம், தட்டார்மடம், மணிநகர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பட்டதாரிகள் உள்ளிட்டோர் கரூருக்கு சென்று வர சாத்தான்குளத்தில் இருந்து விரைவு பேருந்து வசதி இல்லை.
இதனால் இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் பட்டதாரிகளும் பொதுமக்களும் கரூருக்கு சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. எனவே சாத்தான்குளத்தில் இருந்து கரூருக்கு நேரடியாக விரைவு பேருந்து இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், இப்பகுதி வியாபாரிகளும், பட்டதாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவன் கூறுகையில், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கரூர் பகுதியில் வியாபார கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும் படித்த பட்டதாரிகள் வேலை பணி நிமித்தமாக அடிக்கடி கரூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் சாத்தான்குளத்தில் இருந்து கரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி, வள்ளியூர் போன்ற நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து மதுரை, திண்டுக்கல் சென்று கரூருக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே சாத்தான் குளத்திலிருந்து கரூருக்கு பொதுமக்கள் நலம் கருதியும் வியாபாரிகள் நலன் கருதியும் நேரடியாக அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து முதல்-அமைச்சர் , மாவட்ட கலெக்டர், மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், நகர காங்கிரஸ் கட்சி சார்பிலும், நகர ம.தி.மு.க. கட்சி சார்பிலும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கோரிக்கை மனுக்களில் மதுரை, திண்டுக்கல் சுற்றி செல்லும் நிலையில் உள்ள சாத்தான்குளம் பகுதி மக்களின் நலம் கருதி சாத்தான்குளத்தில் இருந்து நேரடியாக கரூருக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்