என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Extortion of jewelry"
- 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- நண்பர்கள் 12 பேருடன் அம்பாள் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சர்வேஷ்குமார் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் அம்பாள் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சர்வேஷ்குமார் தங்கி இருந்த வீட்டிற்குள் 7 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பினர்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த செயின், மோதிரம், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்தனர். மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம், 5 லேப்டாப், 4 வாட்ச் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி செயின், மோதிரம், பணம் உள்பட ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.