search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake bills"

    • போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை.
    • அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும்.

    அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், இதில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.

    அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சுகாதார பணியில் 25 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேலைக்கு வராத நாட்களில், போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி 10.50 சதுர கிலோமீட்டர் பரபரப்பளவு கொண்டது.

    மோசடி

    இங்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சுகாதார பணியில் 25 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வராத நாட்களில், போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

    மேலும் பேரூராட்சி அலுவலர்கள் போலி பில் மூலம் பணம் மோசடி செய்துள்ளதாகவும், கட்டடம் கட்டுவதற்கான புளுபிரிண்ட் அனுமதி பெறுவதிலும், பேரூராட்சி அலுவலர்கள் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    விசாரணை

    இதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார், கடந்த 13-ந் தேதி முதல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக கடந்த 6 நாட்களாக பேரூராட்சி அலுவலர்களை நேரில் அழைத்து விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    தொடர்ச்சியாக நேற்று பேரூராட்சி டைபிஸ்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் துப்புரவு மேஸ்திரி ஆகியோரிடமும் விசாரணை செய்தனர். மேலும் இதுதொடர்பாக நிறைய போலி பில்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், பேரூராட்சி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் இறுதியில் தான் புகார் குறித்த உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

    ×