search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake Doctors"

    • போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுக்குறித்து மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை அலுவலர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் விசாரணை செய்து வந்தார்.

    அப்போது சின்ன வளையம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெருவைச் சேர்ந்த மெய்யப்பன் மகன் பாண்டியன் (61), பெரிய வளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மகாமணி மகன் தமிழ்ச்செல்வன் (39) ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுபோல் டாக்டர் தொழில் செய்பவர்கள் மீது, சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது.

    மேற்கண்ட தகவல் டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேலும் பலர் தலைமறைவு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் உமராபாத் போலீஸ் நிலையத்தில் நேற்று ஓரு புகார் செய்தார். அதில் உமராபாத் போலீஸ் எல்லையில் ஏராளமான போலி டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தகவல் பட்டியலை புகாராக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கூட்டு ரோட்டில் ஒரு கிளினிக்கை சோதனை செய்தபோது ஆம்பூர் எஸ். கே.ரோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 73) மற்றும் வீராங்குப்பம் கூட்டு ரோட்டில் ஜெயபால் (87) ஆகிய 2 போலி டாக்டர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலி டாக்டர்கள் சோதனை அறிந்த மற்ற போலி டாக்டர்கள் தங்களுடைய கிளினிக்கை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    • ஆய்வு செய்த போது பிடிபட்டனர்
    • மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பாஷா என்ற மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது பாஷா (வயது 46) என்பவர் டாக்டருக்கு படிக்காமல், ஊசி செலுத்துவது உள்ளிட்ட ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாஷாவை கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சீல் வைப்பு அதேபோன்று திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் செயல்பட்டு வந்த இளங்கோ என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் இளங்கோ (43) என்பவர் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவராக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இளங்கோவை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் பாஷாவுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் இளங்கோவுக்கு சொந்தமான மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • 12 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு
    • ஆம்பூர், வாணியம்பாடியில் சோதனை 12 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் சிலர் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ அலுவலர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலி மருத்துவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய உத்தர விட்டார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளில் குழுவினர் சோதனை செய்தனர்.

    இதில், திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை கிராமத்தைச் சேர்ந்த பழனி (51) என்பவர் மருத்து வம் படிக்காமல் அதேபகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற அரசு அதிகாரிகள் பழ னியை கைது செய்து அவரது கிளீனிக்கில் இருந்து மருந்து, மாத் திரைகள், சிரஞ்சிகளை பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டு களாக கிளீனிக் நடத்தி வந்த வேலன் (49) என்பவரையும் போலீ்சார் கைது செய்து, அவரது கிளீனிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகள், டானிக் உள்ளிட்டவை களை பறிமுதல் செய்தனர்.

    ஆம்பூர் சுற்ற வட்டாரப்பகுதி களில் ஆம்பூர் அரசு மருத்துவ மனையின் துணை மருத்துவ அலுவலர் நதியா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (47), கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (69) ஆகிய 2 பேரும் மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்திமருத்துவம் பார்த்துவருவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, 2 பேரையும் காவல் போலீசார் கைது செய்து அவர்களது கிளீனிக்கில் இருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்து-மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சோதனையில் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (47) என்பவர் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டு களாக கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (30) என்பவரும் மருத்து வம் படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்ததை தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து அவரது கிளீனிக் குக்கு 'சீல்' வைத்தனர்.

    ×