என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fake signature"
- அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார்.
- சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
இவரது கணக்கில் இருந்த 60 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கணக்கை சரிபார்த்தபோது கடந்த 28-ந் தேதி மற்றும் இந்த மாதம் 16-ந் தேதி தலா 30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக அவரது கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அவரது கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர் சக்திவேல் என்பவர் போலியாக கையெழுத்திட்டு அண்ணாமலை கணக்கில் இருந்த ரூ.60 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சேலம் அஞ்சலக கிழக்கு கோட்ட துணை கண்காணிப்பாளர் மஞ்சு, வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- சுகன்யா தேசிய ஊரக சுகாதார தூய்மை இயக்கத்தில் பணிபுரிபவர்களின் சம்பள பணம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909 பணத்தை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கையொப்பத்தை காசோலையில் போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்துள்ளார்.
- மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதவி கணக்காளர் சுகன்யா மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துப்பட்டியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக பணி புரிபவர் புதுக்கோட்டை மேல 3-ம் வீதியை சேர்ந்த கண்ணன் மனைவி சுகன்யா (வயது 34).
இவர் கடந்த 21.3.22 முதல் 16.8.22-க்கு இடைப்பட்ட நாட்களில் தேசிய ஊரக சுகாதார தூய்மை இயக்கத்தில் பணிபுரிபவர்களின் சம்பள பணம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909 பணத்தை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கையொப்பத்தை காசோலையில் போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதவி கணக்காளர் சுகன்யா மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்