search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family issue"

    • திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்புறம் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குழந்தையுடன் பெண் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கை,கால்களில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருகில் 5 வயது சிறுவன் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தான். சிறுவன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்துக்கு அருகில் 2 சிறுமிகள் காயத்துடன் கிடந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் துவாரகை நகரை சேர்ந்தவர் மீனா (29) என்பதும், அவர் தனது 10 வயது மகள் ஹரிஷ்மா, 2-வது மகள் ஹாசினி (7), மகன் சந்திரன் (5) ஆகியோருடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய வந்துள்ளார். சிறுமிகள் இருவரும் ரெயில் வந்ததும் தண்டவாளத்தை விட்டு தப்பி வெளியே ஓடி வந்து விட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் ரெயில் அடிபட்டு இறந்தான். மீனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

    மீனாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, இரண்டாவதாக மகாதேவன் நண்பருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது .தீர்வு தொகையாக ரூ.70,88,492 வழங்கப்பட்டது. இதில் பல்லடத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வன்முறை குறித்த வழக்கில் தம்பதியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

    ×