என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fan club"
- என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால் நான் அதை ஊக்குவிக்க மாட்டேன்.
- என் மகனுக்கு ஒரு அட்வைஸ், ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸ்-ஐ என்னால் எப்படித் தர முடியும்?
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேர்காணலில் பேசிய அரவிந்த் சாமி, "மாநாடு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தேர்வாகி பின் படப்பிடிப்புக்கான சரியான நேரம் கிடைக்காததால் அப்படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்தார் என்று தெரிவித்தார்.
ரசிகர் மன்றங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அரவிந்த சாமி, "எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப்போகிறார்கள்? ரசிகர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்குமா? நான் சினிமாவைவிட்டு விலகினால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்விகள் எனக்குள் உண்டு. என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால் நான் அதை ஊக்குவிக்க மாட்டேன், அப்படி இருக்கும் பட்சத்தில் என் மகனுக்கு ஒரு அட்வைஸ், ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸ்-ஐ என்னால் எப்படித் தர முடியும்?"
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றியை பெற்றது.
- இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக விஜய் சேதுபதி உள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது.
மேலும் இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு கணியன் என விஜய் சேதுபதி பெயர் சூட்டினார்.
விஜய் சேதுபதி குழந்தையைக் கொஞ்சி முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
தன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளர் குமரனின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி#VijaySethupathi @VijaySethuOffl@MakkalSelvanFC@kumaran_VSP @cp_navinraj @VJS_CUDDALORE pic.twitter.com/KuXNMBRdfn
— VIJAYSETHUPATHI IT WING CUDDALORE OFFICIAL (@VJS_CUDDALORE) September 11, 2024
- தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
- 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்படும் தெரிகிறது.
இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூர் மற்றும் ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதி, வேலாயுதம் வீதி, அண்ணா சாலை, சிங்கார வீதி, தேர் வீதி, செல்லப்ப கவுண்டன் வலசு ஆகிய இடங்களில் புதிய ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய பரிந்துரையாளர் ம.ரமேஷ் குமார் வரவேற்றார்.
மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் பகிர் மாவட்ட துணை பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நகர பொறுப்பாளர்கள் பிரகாஷ், திவாகர் ஈரோடு ஒன்றிய தலைவர் முத்தமிழ் பிரபாகர், பவானி நகரத் தலைவர் கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் மன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரமேஷ் குமார், நாகராஜ், பார்த்திபன், மாதேஷ், கார்த்திகேயன், தினேஷ் பாபு மணிகண்டன், மாதேஷ், சுமை ரமேஷ், வேல்முருகன், சரவணன், கோபால், விவேக் தியாகு, சரவணன், லோகநாதன்மற்றும் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்முடிவில் அந்தியூர் நகர பொறுப்பாளர் ஜெயக்குமார் கூறினார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்