search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers are arrested."

    • மாடுகளையும் சேர்த்துபார்த்து க்கொ ள்ளுமாறு கூறிவிட்டு வீடு திரும்பினார்.
    • மாடுகளின் நுனி காது அறுக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அபூர்வம் அதிர்ச்சியடைந்து கூச்சலி ட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம் (வயது 65). இவர் 4 பசு மாடுகள் வைத்துள்ளார். இந்த மாடுகளை அங்குள்ள கரம்பு பகுதியில் மேய்ப்பது வழக்கம். அதுபோல நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதே போல அதே கிராமத்தை சேர்ந்த மற்றொருவரும் 3 மாடுகளை மேய்க்க வந்தார். அவரிடம் தனது 4 மாடு களை ஒப்படை த்த அபூர்வ ம், முக்கிய பணி உள்ளது, எனது, மாடுகளையும் சேர்த்துபார்த்து க்கொ ள்ளுமாறு கூறிவிட்டு வீடு திரும்பினார்.

    இதையடுத்து நேற்று மாலை 7 மாடுகளும் அவரவர் உரிமையாளர் வீடுகளுக்கு திரும்பி வந்தது. மாடுகளின் நுனி காது அறுக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அபூர்வம் அதிர்ச்சியடைந்து கூச்சலி ட்டார். பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் மாடுகளை பார்த்தபோது, அங்கிருந்த 3 மாடுகளின் நுனி காதுகளும் அறுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக புவனகிரி போலீசாரிடம் அபூர்வம் புகார் அளித்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மேய்ச்ச லுக்கு சென்ற மாடுகள் கீழமணக்குடி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மேய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த நில உரிமையாளர்களான விவசாயிகள், 7 மாடுகளின் நுனி காதுகளை அறுத்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான சண்முகம் (17), வீரமுத்து (45), பழனிச்சாமி (63), லட்சுமணன் (52) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தச்சுக்காடு கிராமத்தை சேர்ந்த மாடுகள் அடிக்கடி விவசாயப் பயிர்களை மேய்வதாகவும், இது தொட ர்பாக கிராம பஞ்சாயத்தில் மாடுகளின் உரிமையா ளர்களுக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டு ளளதாகவும் கூறினார்கள். மேலும், அடுத்தமுறை மாடுகள் மேய்ந்தால் அதன் நுனி காதுகள் அறுக்கப்படும் என பஞ்சாயத்தில் எச்சரித்து அனுப்பட்டது. இதனால் எங்கள் வயல்க ளில் மேய்ந்த மாடுகளின் நுனி காதுகளை அறுத்ததாக விவசாயிகள் கூறினார்கள். இதையடுத்து 4 பேரையும் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×