என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmers demands"
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் தற்பொழுது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தாங்கைகுளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும்
- மழை பெய்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும்
உடன்குடி:
உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சியில் 224.8 ஏக்கர் பரப்பளவில் தாங்கைகுளம் உள்ளது. இது ஒரு நீர்பிடிப்பு குளமாகும். இந்த குளத்திலிருந்து எந்தவிதமான கால்வாய் பாசனமும் கிடையாது.
இந்த குளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும். கடல் நீர்மட்டம் விவசாய விளைநிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும். இந்த குளத்தின் மூன்று புறமும் கரையை உயர்த்த வேண்டும் என்றும், குளம் நிரம்பி மறுகால் பாயும் கலுங்கை 2 அடி உயர்த்த வேண்டும் என்றும், தற்போது பழுதாகி உடைந்து கிடக்கும் கலுங்கை உடனடியாக சீர் படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மழை பெய்து இக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே இந்த பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
- உடன்குடி பகுதியில் பாசன குளங்கள் ஒரு சில மட்டுமே உள்ளது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் உடன்குடி வட்டார பகுதியை மழை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
உடன்குடியை சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறிபடுகைகுளம், சடையனேரிகுளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்கள் தண்ணீர் இல்லாமல் முழுமையாக வறண்டு கிடக்கிறது.
மழை வந்து கடலுக்கு வீணாக செல்லும்போது மட்டும்தான் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காத்திருக்காமல் ஏதாவது ஒரு வழியில் இந்த 15 நீர் பிடிப்பு குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி பகுதியில் பாசன குளங்கள் ஒரு சில மட்டுமே உள்ளது.
அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான். பம்புசெட் மூலமேவிவசாயம் நடைபெறுவதால் அவை உறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் முழுமையாக நிரப்பி கொடுத்தாலே விவசாயம் விறுவிறுப்பாக நடைபெறும்.
இதனால் மழையை மட்டுமே எதிர்பார்த்திருக்க அவசியம் இல்லை. 15 நீர் பிடிப்பு குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.
- உடன்குடி யூனியன் பொறியாளர் தயாரித்த ரூ.70 லட்சம் மதிப்பீடு செய்த, வழி, வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
- கருப்பட்டி என்றாலே அது உடன்குடி தான் என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு மிக்கது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதி விவசாய பொதுநல அமைப்பு மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி வட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாங்கைக்குளத்தின் கரையோரம் குலசேகரன்பட்டினம் - சாத்தான்குளம் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
(வெங்கட்ராமானுஜபுரம் செல்லாமல் நேர்வழி) உடன்குடி யூனியன் பொறியாளர் தயாரித்த ரூ.70 லட்சம் மதிப்பீடு செய்த, வழி, வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி அருகேயுள்ள தாங்கைத்குளத்தின் மேற்கு கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும்.
சமீபத்தில் புதிதாக அகலப்படுத்தி போடப்பட்ட உடன்குடி- தாண்டவன்காடு சாலையில் மீதமுள்ள சிவலூர் - ரெங்கநாதபுரம் சாலையில் மழைக்காலத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கும் என்பதால் உடனடியாக புதிய சாலை அமைத்து தர வேண்டும்.
உடன்குடி பஜார் நான்கு சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் இடத்தில் மழை நீர் தேங்கி பயணிகளை படாத பாடு படுத்துகிறது, அந்த சாலையை உயர்த்தி போட வேண்டும், கருப்பட்டி என்றாலே அது உடன்குடி தான் என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு மிக்கது.
மீண்டும் அந்த பெயரைக் காப்பாற்றிட எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்துக்குமேற்பட்ட கிணற்றுநீர் பாசனத்தின்மூலம் உடன்குடிவெற்றிலை, வாழை, நெல், பல வகையானகாய்கனி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
- ஆண்டுதோறும்பருவமழை தவறியதாலும், குளங்கள், குட்டைகளில் வருடம்தோறும் தண்ணீர் தேக்கி வைக்காததாலும், கிணற்று நீர் பாசனம் அடியோடு அழிந்தது
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில்உள்ள பல்வேறு விவசாயிகள், பொதுநல அமைப்பினர் ஆகியோர் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடிவட்டார பகுதியில்உள்ளசுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்துக்குமேற்பட்ட கிணற்றுநீர் பாசனத்தின்மூலம் உடன்குடிவெற்றிலை, வாழை, நெல், பல வகையானகாய்கனி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆண்டுதோறும்பருவமழை தவறியதாலும், குளங்கள், குட்டைகளில் வருடம்தோறும் தண்ணீர் தேக்கி வைக்காததாலும், கிணற்று நீர் பாசனம் அடியோடு அழிந்தது, கடந்த ஒரு சில ஆண்டுகளாக மீண்டும் குளங்கள் குட்டைகள் நிரம்பி, ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற அமைப்பின் மூலம் உருவான அனைத்துகுளங்கள் முழுமையாக நிரப்பபட்து.இதனால் விவசாய நிலங்கள் நல்ல நிலமாக மாறியது.கிணற்றுநீரும் சுவையான நீராக மாறியது.0 மீண்டும் கிணற்று நீர் பாசனத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளாவில் பிரசாரம் தொடங்கினார். இதற்காக மாநிலம் முழுவதும் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.
அந்தவகையில் திருச்சூர் அருகே உள்ள திரிப்ரயார் பகுதியில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தேசிய மீனவர் பாராளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீனவர்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
மீனவர்கள் விவகாரத்தில் என்னுடைய உறுதி என்னவென்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெறும் தருணத்தில், நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் டெல்லியில் தங்களுக்கான தனி அமைச்சகத்தை பெறுவார்கள். இதற்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதை தினந்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
இன்றைய மத்திய அரசில் அனில் அம்பானி அல்லது நிரவ் மோடிக்குத்தான் ஏராளமான செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை 10 வினாடிக்குள் நிறைவேற்ற முடிகிறது. அதை சத்தம் போட்டும் கேட்கவேண்டாம், ரகசியமாக கேட்டாலே கிடைத்து விடுகிறது.
ஆனால் மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட எளிய மனிதர்கள், தங்களை கவனிக்குமாறு அரசுக்கு முன் நின்று கத்துகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்பதில்லை. தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் செவிசாய்ப்பார்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
முன்னதாக காசர்கோட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ், சரத்லால் ஆகியோரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமாரின் வீட்டுக்கும் அவர் சென்றார்.
இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களால் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் சுகைபின் குடும்பத்தினரை கண்ணூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தி சந்தித்தார். சுமார் ½ மணி நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கும் என உறுதியளித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பயணத்தின் போது கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #ParliamentElection #RahulGandhi #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்