search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers fast"

    • எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன.
    • சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரிகளும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன. சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரி களும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இவை அனைத்தும் ஜனவரி மாதம் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அனைத்து குவாரிகளும் அரசின் கட்டு ப்பாட்டில் சென்றுள்ளது. இந்த குவாரியில் மழை நீர் மற்றும் அனைத்து கிணறுகளிலிருந்து வரக்கூடிய ஊற்று நீர் தேங்கி நிற்பதால்

    இதனை கல்குவாரியின் உரிமையாளர்கள் எம்சாண்ட், பி சான்ட், உள்ளிட்டவை களுக்கு பயன்படுத்த தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வருகின்றனர்.

    இதனால் தங்களது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் இது குறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் இப்பகுதி விவசாயி ராமசாமி என்பவரது தோட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். குடிநீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, திருச்செங்கோடு பொறுப்பு டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட நேரில் வந்து போராட்டத்திலொ ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குவாரிகளில் இருந்த மோட்டார்களை அப்புறப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றியதால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது.
    • மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது. இதற்காக மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி ஆகிய பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடங்களில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சர்வே பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இப்பகுதியில், அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், சிப்காட் அமைந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விளை நிலங்கள் பாழ்படும். விவ சாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்துக்கு, அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழு ஆரம்பித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக, முட்டியிட்டு ஆர்ப்பாட்டம், கறவைமாடு ஒப்படைப்பு போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என, பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக வளையப்பட்டியில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், விவசாயி கள் கலந்துகொண்டனர். 

    ×