என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmers leaders"
திருவண்ணாமலை:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சந்தியாகு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும். கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்து கூறி வாக்கு பெறுவது குறித்தும் பேசப்பட்டது.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரிடம் “குப்பநந்தம் அணையில் இருந்து ஏரையூர் வரை தண்ணீர் வருகிறது. ஊசாம்பாடி ஏரியில் இருந்து கீழ்பென்னாத்தூர் வரை கால்வாய் கட்டி கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கையின் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. 7 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் அ.தி.மு.க. வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் இந்த கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டால் செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய தாலுகாக்களில் பாசன வசதி ஏற்படும். இதனால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது விரக்தி ஏற்பட்டு வருகிற தேர்தலிலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்களுக்கு வாக்கு அளிக்க உள்ளோம். பூந்தோட்டத்திற்கு அரசு இலவச மின்சார வசதி செய்து தர வேண்டும். உயர் மின்அழுத்த கோபுரம், பசுமை வழிச்சாலை போன்ற விவசாய நிலங்களை அழித்து கொண்டு வரும் திட்டங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஒன்றியத் தலைவர்கள் ஜெயராமன், ராமசாமி, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.