search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers petition"

    • குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

     திருப்பூர் : 

    பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சங்கம் பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் 4-வது மண்டலத்தில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. இந்த பாசனப்பகுதி கடைமடை பகுதியாக உள்ளதால் எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மழைபொழிவும் இல்லாததால் பாசன நிலங்கள் வறண்டு விட்டன. பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் 124 கிலோ மீட்டரில் பிரியும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் ஜீரோ பாய்ண்டில் வினாடிக்கு 131 கன அடி தண்ணீர் வரவேண்டும். ஆனால் 112 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. தற்போது பாசனத்துக்கு 15 நாட்கள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். அதுபோல் இப்போது வரும் நீரின் அளவை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்பூங்கொடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு நன்செய் பட்டாதாரர் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்பூங்கொடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டு ள்ளது. வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.

    ஆகையால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமதாஸ் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மஞ்சளாறு நீர்த்தேக்க த்திலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோ ட்டை வட்டத்துக்கு உட்பட்ட வத்தல க்குண்டு, பழைய வத்தல க்குண்டு, கணவா ய்பட்டி,

    குன்னுவ ராயன் கோட்டை ஆகிய கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெருக்கி விவசாயிகள் தங்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் பொது ப்பணித்துறை அலுவல ர்களுக்கு உத்தர விடுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போது நீரினை பயன்படுத்துவோர் சங்க துணை தலைவர் ஜெயபால், செயலாளர் மணிபாரதி, பொருளாளர் பாலமுருகன், உறுப்பினர்கள் முருகன், அழகர்சாமி, குணசேகரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

    • திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
    • அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை குளங்கள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 971 குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது.

    மாநில அரசின் 1,652 கோடி ரூபாய் செலவில், கடந்த 2019 டிசம்பர் 25ல் திட்டப்பணி துவங்கியது. 6 நீரேற்ற நிலையங்கள், குளம், குட்டைகளுக்கு குழாய் பொருத்தும் பணி உட்பட 94 சதவீத பணிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டத்துக்கென திட்டம் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சில பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டிய நிலையில் அந்த தொகையை ஒதுக்க அரசின் சார்பில் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியம், குருசாமி உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, மனு வழங்கியுள்ளனர்.அதில், கூறியிருப்பதாவது:-

    அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தி வரும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்திற்கு குழாய் பதிக்க நிலம் வழங்கிய விவசாயிகள் சிலருக்கு, இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.எனவே அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு இழப்பீடு வழங்கவும், தற்போதைய பருவமழை காலத்திற்குள் பணியை முடித்து திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    கிணற்று தண்ணீரை விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 215 மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பெரம்பலூர் தாலுகா புதுவேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஒருவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் தண்ணீரை விவசாயத்திற்கு அதிகமாக பயன்படுத்தாமல், விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இதனால் அவர் கிணற்றை சுற்றி சுமார் 20 விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீரும் வற்றி போகிறது. இதனால் போதிய தண்ணீர் இல்லாமல் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் கிணற்றின் தண்ணீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள புதுக்காலனியில் ஒரு இடத்தில் சுகாதாரமற்ற வகையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதில் சீமைக்கருவேல மரங்களும் அதிகமாக வளர்ந்துள்ளன. எனவே அந்த இடத்தை தூய்மைப்படுத்தி, அங்கு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாயக்கூடம் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், படித்த ஏராளமானவர்கள் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் அரசு பணிகள் நேரடியாக விண்ணப்பம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் வேலைக்காக பதிவு செய்தவர்கள் வேலை கிடைக்காமல் பதிவு மூப்பு கடந்து காலாவதியான விரக்தியில் உள்ளனர். எனவே மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை மூட வேண்டும் அல்லது அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் குறிப்பிட்ட நிதி வழங்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 231 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 
    ×