search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father complain"

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இளம்பெண் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மரையூர் பகுதியை சேர்ந்தவர் சவுரிராஜன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (29) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆர்த்திக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நேற்று ஆர்த்தியின் வீட்டுக்கு அவரது தந்தை கலியபெருமாள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆர்த்தி பிணமாக கிடந்தார். இதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் ஆர்த்தியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலியபெருமாள் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் ‘தனது மகள் ஆர்த்தி சாவில் மர்மம் உள்ளது. இதை விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் வரதட்சணை பிரச்சினையால் ஆர்த்தி இறந்தாரா? என்று மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×