search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father condemn"

    சாத்தான்குளம் அருகே குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு சிலுவை தெருவை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது 2-வது மகன் சுரேஷ்(வயது20). இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றினாராம். இதனால் சுரேசை பெருமாள் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சுரேஷ் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வி‌ஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டை அடுத்த நல்லூர் குச்சிபாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் ஹேமசந்திரன் (வயது23). இவர் டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதுபோல் நேற்று காலையும் யாருடனோ ஹேமச்சந்திரன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை சேகர் கண்டித்தார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார்.

    தந்தை திட்டியதால் மனமுடைந்த ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை அவரது தாய் கோமதி கடைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் ஹேமச்சந்திரன் தூக்குபோட்டு தொங்கினார்.

    கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கோமதி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹேமச்சந்திரனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×