என் மலர்
நீங்கள் தேடியது "father death"
- மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
- சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.
சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.
தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
- அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ரமேஷின் தந்தை மரணமடைந்தார்.
- இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ், எம்.பாலசுப்பிர மணி, எம்.ராஜா எம்.சுரேஷ் காந்த் ஆகியோரின் தந்தை திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுச்சந்தை சேர்ந்த குழாய் கடை எம்.முத்துத்தேவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவர் இறந்த செய்தியை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்.முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைப்பு செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முத்துத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோரும் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன், மற்றும் கிழக்கு மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கிளை நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்க ளும், உறவினர்களும் நண்பர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முத்துத்தேவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.
- அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
- தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
மன்னார்குடி:
திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.
அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.
தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
- வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
- ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வந்தவர் வினய் குண்டகாவி(வயது 38). இவர் டாக்டர் ஆவார். இவர் உப்பள்ளியில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். அவருடைய மனைவியும் டாக்டர் ஆவார்.
வினயின் தந்தை வீரபத்ரய்யா. இவரும் டாக்டர். இவர் ஹாவேரி என்ற இடத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அங்கேயே சொந்தமாக ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலையில் திடீரென வினய் மயக்கம்போட்டு விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய மனைவி, வினயை பரிசோதனை செய்தார். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
அவரும், அவரது பிள்ளைகளும் கதறி அழுதனர். வினய் இறந்துவிட்ட தகவல் அவருடைய தந்தை வீரபத்ரய்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட வீரபத்ரய்யா, மகன் இறந்த செய்தி கேட்டதும் பதற்றம் அடைந்தார்.
சிறிது நேரத்தில் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். மயங்கி கீழே விழுந்தார். அவரை, ஆஸ்பத்திரியில் இருந்த சக டாக்டர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் இறந்த செய்தி கேட்ட வீரபத்ரய்யா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
- மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் அவரது மனைவி வைஷ்ணவி. (வயது 19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வைஷ்ணவியின் தந்தை இறந்து போனார். இதற்காக வைஷ்ணவி பெரிய காட்டுபாளையம் கிராமத்துக்கு சென்றார்.
அதன்பின்னர் அவர் மாளிகம்பட்டு கிராமத்துக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வைஷ்ணவி அங்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து நந்தகோபால் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து வைஷ்ணவி என்ன ஆனார் எங்கு சென்றார் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
நேற்று திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்து, லால்குடி வடக்கு அய்யன்வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்தனர். மணமகன், மணமகள் குடும்பத்தார் திருமண பத்திரிகை அடித்து அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.
மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் தடபுடலாக செய்து வந்தனர்.
நேற்று காலை ராஜகுரு- கனிமொழி திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அனைத்து திருமண சடங்குகளும் நிறைவடைந்தன. அந்த நேரத்தில் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.
இதைக்கேட்ட மணமகள், அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன் மணமகள் கலந்து கொண்டார். காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏற்கனவே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி கோகுல இந்திரா வீட்டில் வசித்து வந்தார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவில் இருந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் தொடங்கி மாலை 5 மணிக்கு வேலாங்காடு சுடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிமுகவினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #GokulaIndira
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் 2-வது தார்வழி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீதா 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரபு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 குழந்தைகளின் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சூர்யா (22). இருவரும் தங்கள் கிராமத்தில் இருந்து பைக்கில் தூளி என்ற பகுதிக்கு சென்றனர். பைக்கை சூர்யா ஓட்டினார். பின்னால் தந்தை அமர்ந்திருந்தார்.
காயத்ரி நகர் சிறுபாலம் மீது சென்ற போது மேடு பள்ளத்தில் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தந்தையும், மகனும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், சேகர் மட்டும் சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.