என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » female birth ratio
நீங்கள் தேடியது "female birth ratio"
திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்று கலெக்டர் ராஜாமணி கூறினார்.
திருச்சி:
திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சமூகநலத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண் கல்விக்கும் அவர்களுடைய வாழ்க்கை தரத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசிய அளவில் கேரளாவிற்கு அடுத்து தமிழகம் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் தான் அரசுப்பணி மற்றும் தனியார் துறைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் சுதந்திரமாக சென்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் அரசின் நிதி உதவியுடன் வங்கி கடன் பெற்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் வங்கிகள் மூலம் ரூ.250 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு சதவீதம் கூட கொடுத்த கடனை வசூலிப் பதில் சிரமமில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் இன்னும் கடனுதவி கொடுப்பதற்கு தயாராக உள்ளனர். ஒரு சில மகளிர் சுய உதவிக்குழுவினர் 3 முறை கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி தற்போது 4-வது முறையாக கடன் பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் 2001-ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகளும், 2016-ம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 889 பெண் குழந்தைகளும், 2017-ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 947 பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளனர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆண்களும், பெண்களும் சரிநிகராக இருந்தால் தான் சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பெண் குழந்தைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற கபடி, தொடர் ஓட்டம், கோ-கோ, டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X