search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female mp"

    சென்னை பெண் எம்.பி.க்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

    நெல்லை:

    சென்னை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பெண் எம்.பி. ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம போன் வந்தது. போனில் பேசியவர் தன்னை நெல்லையை சேர்ந்த அ.தி.மு.க. வி.ஐ.பி. என்று அறிமுகப்படுத்தி பேசியவர், பெண் எம்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த பெண் எம்.பி.யின் உதவியாளர் நெல்லையில் உள்ள அந்த வி.ஐ.பி.யை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போனில் அவர் பேச வில்லை என்றும், வேறு யாரோ பேசியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் எம்.பி.க்கு வந்த செல்போன் நம்பரை கொடுத்து யார் என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நெல்லை அ.தி.மு.க. வி.ஐ.பி. பாளை போலீசில் புகார் செய்தார். அப்போது பாலியல் தொல்லை கொடுத்த போன் எண்ணையும் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. தொடர்ந்து அந்த செல்போன் சுவீட்ச் ஆப் செய்யப்படாமல் இயங்கியதால் போலீசார் அந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அந்த செல்போன் மூலம் பேசியது தெரியவந்தது. இவர் அடிக்கடி தன்னை கலெக்டர் என்றும், பல்வேறு வி.ஐ.பி.க்கள் பெயரை கூறியும் பலரிடம் பேசியதும் தெரியவந்தது. அந்த வாலிபர் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதும், சான்றிதழ்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் செல்போனை கொடுக்க கூடாது என்று அவரது உறவினர்களிடம் எச்சரித்து எழுதி வாங்கினார்கள். இதைத்தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    ×