என் மலர்
நீங்கள் தேடியது "Female Students"
- விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
- மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.
அருப்புக்கோட்டை
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரிசாள் (9-ம் வகுப்பு) மாணவி மோனிகா (9-ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி கீர்த்தனா மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று கேடயமும், சான்றிதழும் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த 3 மாணவிகளும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரி யைக ளையும், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளிச் செயலாளர் ராமச்சந்திரன், பள்ளித் தலைவர் ஜெய வேல்பாண்டியன் பள்ளி உதவி செயலாளர் காசிகோபிநாத், பள்ளி உதவி தலைவர் அஜய், தலைமையாசிரியை தங்கரதி மற்றும் உறவின்முறை பெரியோர்கள் ஆசிரியர்கள் மாணவ-மாணவி கள் பாராட்டினர்.
- கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
- ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
நாகப்பட்டினம்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
- கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான வழிக்காட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.
- புதுமைப்பெண் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5093 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
தஞ்சாவூர்:
பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்க ளாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட மாக தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாணவிகளுக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் கார்டு, பைல் பேடு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.
இதனை தொடர்ந்து தஞ்சையில் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு மூலம் அனைவரும் காண ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து புதுமைப்பெண் திட்டம் இரண்டாம் கட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
இதில் கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் கார்டு, பைல் பேடு, புதுமைப்பெண் திட்டம் தொடர்பான வழிக்காட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5093 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 2-ம் கட்டத்தில் 2473 மாணவிகள் முதல் தவணையாக பயனடைய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
- கோவில் வளாகத்தில் பள்ளி மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.
திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில் செயல் அலுவலர் முருகையன் உழவார பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் பிரேமா தேவி அனை வரையும் வரவேற்றார்.
நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில் யோகா பயிற்றுனர் ஹரி கிருஷ்ணன், சர்வாலய உழவாரப்பணி செயலாளர் ஜெயபிரகாஷ், துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.
பணிக்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.
- பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
- தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டது.
அதை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் நகர்மன்ற தலைவி வழங்கினார்
- சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இந்தநிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், சின்னச்சாமி, வீரக்குமார், ஜமீலாபெளசியா ஆகி யோர் கலந்து கொண்டனர். தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதேபோல் திருமங்கலம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
- அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
- இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாடிப்பட்டி அ.தி.மு.க. நகர் செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமார் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். மேலும் வருகிற 28-ந்தேதி ஆண்டிப்பட்டி பங்களா அருகே நடைபெறும் கண்காட்சியை பார்ப்பதற்கு மாணவிகளுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.
இதேபோன்று வலையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
- மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
கடலூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் போட்டி களை தொடங்கி வைத்த னர். இதில் இணை ஒருங்கிணை ப்பாளர் ராஜராஜ சோழன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், கருப்பையன், மனோகர் பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. 14 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போ ட்டிகள் நடைபெறுகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
- 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
- 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தது.
சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், பயிற்றுநர்கள் விளையாட்டு இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
- 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.
குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
- ஆசிரியரின் அட்டூழியத்தை மூடி மறைத்த தலைமை ஆசிரியர்.
- 3 பேர் மீது நடவடிக்கை? கல்வி அதிகாரிகள் விசாரணை
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது அந்த பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 9 பேர், தங்களிடம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் (வயது 54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த தாகவும் கூறினர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இடைநிலை ஆசிரியர் நடராஜ், பிரச்சனை தெரிந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் மீது சிறுமுகை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் இச்சம்ப வத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடைநிலை ஆசிரியர் நடராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இந்த பிரச்சினை தெரிந்தும், நடவடிக்ைக எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைதான ஆசிரியர் நடராஜனின் அட்டூழியத்தை மூடிய மறைத்தது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

போக்சோ வழக்கில் கைதாகி உள்ள நடராஜன் இதற்கு முன்பாக அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி பள்ளியில் பணியாற்றி வந்ததும், அப்போது அங்கும் இதே போன்று எழுந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறைக்கு சென்று பின்னர் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கிருஷ்ண கிரியில் பள்ளி ஒன்றில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுப்பாளையத்தில் ஒரு ஆசிரியர் கைதாகி உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
- தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை லட்சுமி நகா் பகுதியை சோ்ந்தவா் மருதாசலமூா்த்தி. இவரது மகள் அவந்திகா (வயது 19). அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்த ரமேஷ் மகள் மோனிகா (19). இவா்கள் இருவரும் திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனா். மேலும் இருவரும் பகுதி நேரமாக அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவந்திகா வீட்டுக்கு மோனிகா சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உள்ளே அவந்திகா, மோனிகா இருவரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவந்திகா, மோனிகா இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். படிக்கும் போதும் ஒன்றாகவே இருந்து படிப்பார்கள். ஆனால் அவர்களது பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள். எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ? என்று பயந்த 2 பேரும் தற்கொலை செய்துள்ளது போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.