என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fire-breathing dragon"
- 2022 மார்ச் மாதம் இரவு விருந்தில் இருவரும் சந்தித்து கொண்டனர்
- அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது
உலகின் முன்னணி இணையவழி சமூக கருத்து பரிமாற்ற வலைதளமாக இருந்து வந்த டுவிட்டரை, உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் 2022-ல் சுமார் ரூ. 37 ஆயிரம் ($44 பில்லியன்) கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
2022 மார்ச் மாதம் அதன் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பராக் அக்ரவால் எனும் இந்திய-அமெரிக்கரை ஒரு இரவு நேர விருந்தில் எலான் மஸ்க் சந்தித்தார்.
2022 அக்டோபர் மாதம் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், முதல் வேலையாக பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.
டுவிட்டர் வலைதளத்தின் லாபத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது வரை எடுத்து வரும் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றம் செய்திருக்கிறார். அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் வாழ்க்கை சரிதத்தை வால்டர் ஐசக்ஸன் என்பவர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் நீக்கியதற்கான காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மஸ்க், பராக் அகர்வால் குறித்து என்ன நினைத்தார் என வால்டர் எழுதியுள்ளார். "அக்ரவால் ஒரு 'நல்ல மனிதர்.' ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு 'நல்ல மனிதர்' எனும் குணம் மட்டும் போதாது. மக்களால் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி விரும்பப்பட வேண்டும் எனும் அவசியமில்லை. நெருப்பை உமிழும் டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை," இவ்வாறு மஸ்க் கருதியதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
கடந்த அக்டோபரில் பராக்கை பணிநீக்கம் செய்த மஸ்க், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தானே அந்த பொறுப்பை வகித்து வந்தார்.
2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் வல்லவரான லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்த பிறகு மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்