search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks stores"

    விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டு இருப்பதாக வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் தெரிவித்தார்.
    சிவகாசி:

    மத்திய அரசின் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் சிவகாசியில் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் 694 பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த கடையின் உரிமையாளர்கள் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுசெயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுஉள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக பட்டாசு கடைகளில் சிறப்பு சோதனை நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது 110 பட்டாசு கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 18 பட்டாசு கடைகள் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. பட்டாசு கிப்ட் பாக்சுகளில் கேப் வெடி மற்றும் கலர் மத்தாப்பூ பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் இது போன்ற வெடிகளை கிப்ட் பாக்சுகளில் வைக்க வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்துள்ளது.

    இதை தொடர்ந்து அந்த பட்டாசு கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமத்தை ரத்து செய்துள்ளோம். அதே போல் தயாரிப்பு முகவரி இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என விதி உள்ளது.

    ஆனால் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தயாரித்தவர்களின் முகவரி இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடைகளின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளோம். மொத்தத்தில் இந்த ஆய்வில் விதிகளை மீறியதாக 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    ×