search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish fingers"

    • மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நாட்டின மீன் வகைகள் இயற்கை நீர் நிலைகளில் இருக்கும் போது தாய் மீன்கள் முட்டையிட்டு முட்டையிலிருந்து வெளிவரும் நுண் மீன் குஞ்சுகளை பிற வகை மீன்களால் உண்ணப்படுவதால் மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன் இனமே அழிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து நாட்டின மீன்களை பாதுகாத்திட நாட்டின மீன்களை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் செயற்கை தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கண்டைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோதையாறு, கொள்ளிடம், அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டுதல் முறையில் நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் போது மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் வெகுவாக அதிகரித்திடும்.

    இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 3 லட்சம் மீன் விரலிகள். இவை 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்க்கப்பட்டு முதல் கட்டமாக ஒரு லட்சம் மீன் விரலிகள் இன்று நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேட்டூர் காவிரி ஆற்றில் 4 ரோடு அனல் மின் நிலைய பாலபகுதியில் இருப்புச் செய்யப்பட்டது. இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2.70 லட்சமாகும்.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.கோபால், தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணியம், மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×