என் மலர்
நீங்கள் தேடியது "Fishermen"
- மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
- ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.
ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
- தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார்.
- இன்று மாலையில் கரைக்கு திரும்பும் படகுகளுக்கு மட்டும் அனுமதி.
- விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என்று கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு, மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் தினசரி இழுவை விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடலில் தங்காமல் காலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மாலையில் கரை திரும்பும் படகுகளுக்கு மட்டும் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் செல்லும் படகுகள் உயிர்காப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. வரும் 16-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கடலில் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
- 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த 5-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை 2 படகுகளோடு இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரியும் ராமேசுவரத்தில் கடந்த 6-ந்தேதி முதல் பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு வானிலை சீரான நிலையில் 13 நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இன்று காலையில் மீன்பிடி உபகரண பொருட்களை சேகரித்துக்கொண்டு மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்கு புறப்பட்டனர்.
இதனால் இன்று காலை முதலே ராமேசுவரம் துறைமுகம் பரபரப்பானது. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேபோல் 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் 1500-க்கு மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
- மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
- மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது .இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.
இந்த 2 மாவட்ட மக்களின் கோரிக்ககைளை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பரா என்கிற இடத்திலும் 2 பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த 2ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டனர்.
தற்போது இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. எனவே இந்த 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ.சி.ஆர். சாலையில் அனுமந்தையில் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
- மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்.
- முத்துப்பேட்டை சுற்றுவட்டார மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், வாழ்வுரிமை குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் பேசினர்.
இதில், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
- ஏர்வாடி அருகே வலையில் சிக்கிய டால்பின் மீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
- இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கீழக்கரை
மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வாலிநோக்கம் கடலில் தற்போது சீலா மீன் பிடிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி பின்னர் கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன் வலையில் சிக்கி இருந்தது. வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பினை கண்ட மீனவர்கள் அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாயல்குடி அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வேப்பமரத்து பனை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டுப் படகில் கரைவலை வைத்து மீன்களை பிடித்து வருகின்றனர். நேற்று இரவு நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனைக் கண்ட நாட்டுப் படகு மீனவர்கள் வேப்பமரத்துப்பனை கடற்கரையோரம் வலைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
- தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
- மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி:
மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வருகிற 8-ந்தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதைத்தொடர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நாளை (புதன்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர கிராமங்களில் மீனவ மக்களிடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆங்காங்கே ஒலி பெருக்கி மூலமாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.
- 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
- மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீர்காழி:
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது.
கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் படகுகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பூம்புகார் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீடுகளை பாதுகாத்து கொள்ள தார் பாய் வழங்க வேண்டும்
- முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டனிடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
மாண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பாதுகாத்து கொள்ள தார் பாய் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டனிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தார் பாய்களை வையாபுரி மணிகண்டன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு மாநில நிர்வாகிகள் உதயசூரியன், ஆறுமுகம், கமல், மணிகண்டன், பெயிண்டர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.