search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FLAG PARADE"

    • அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
    • தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.

    அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர். 

    • போலீசார் 24 மணி நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • 400-க்கும் மேற்பட்டவர்கள் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட முக்கிய இடங்களில் போலீசார் 24 மணி நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் முன் குமரன் ரோட்டில் தொடங்கியது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில், துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 400-க்கும் மேற்பட்டவர்கள் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பொதுமக்கள் எந்தவித பதற்றம் அடைய வேண்டாம். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

    • விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்தது
    • முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆற்காட்டில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பொதுமக்களிடத்தில் அச்சத்தினைப் போக்கும் வகையில் ஆற்காடு நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த 145 போலீசார் ஆற்காடு அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.

    இதில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, மற்றும் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் உள்பட போலீசார் கலந்து கொண்டு துப்பாக்கியை ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
    • முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்

    வாலாஜா:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள், விழாகுழுவினர் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் வாலாஜாப்பேட்டையில் நேற்று மாலை போலீஸார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரன், டி.எஸ்.பி. பிரபு, ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தை சேர்ந்த 145 போலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    இந்த அணிவகுப்பு ஊர்வலமானது அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கி எம்.பி.டி சாலை, வாலாஜா பேருந்து நிலையம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மகாத்மா காந்தி பூங்கா அருகே முடிவடைந்தது.

    • பெரம்பலூரி போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
    • பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள், தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து, ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். இதையொட்டி நேற்று மதியம் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வடக்கு மாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு வழியாக காமராஜர் வளைவில் நிறைவு பெற்றது. பேண்டு வாத்தியம் முழங்க நடந்த இந்த அணிவகுப்பில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல் லெப்பைக்குடிக்காட்டிலும் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது."

    ×