என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flower garlands"
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சுமார் 5 டன் எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது
- ருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை
திருச்செங்கோடு:
திருப்பதியில் ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவத் திருவிழா வுக்கு திருச்செங்கோட்டில் இருந்து பூமாலைகள் அனுப்பபட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது. இதற்காக இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சுமார் 5 டன் எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது. திருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை திருச்செங்கோடு, சேலம், கொங்கணாபுரம், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்கள் மாலைகளாக தொடுத்தனர்.
இது குறித்து கொங்கணா புரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் நிர்வாகிகள் சுகந்தி, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-
கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவத் திருவிழா ஆகியவற்றுக்கு பூமாலைகள் வருடம்தோறும் தொடுத்து அனுப்பி வருகின்றோம். இறைப்பணியில் அதிக ஆர்வமுள்ள பக்தர்கள் மாலை தொடுக்கும் பணியை செய்தனர்.
மேலும் மாலைகளோடு கரும்பு, தென்னம்பாளை, தென்னங் குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் சுமார் ரூ.2 1/2 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் ரோஜாசெடிகள் ஆகி யவற்றையும் சிறப்பு பூஜைகள் செய்து அனைத்தை யும் 3 லாரிகள் மூலம் திருமலைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.