search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flowers prices fall"

    வரத்து அதிகரிப்பின் காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பூக்கள் விளைச்சல் அதிகரித்தது. தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரிக்கும் என ஏராளமான விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரத்து அதிகரித்ததால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.300-க்கு விற்ற மல்லிகை ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.120-க்கும், முல்லை ரூ.200, செவ்வந்தி ரூ.30, காக்கரட்டான் ரூ.150, செண்டுமல்லி ரூ.30, சம்பங்கி ரூ.40, அரளி ரூ.150, ரோஜா ரூ.40 என வாங்கப்பட்டது.

    மழையில் பூக்களை பறிக்காமல் விட்டாலும் வீணாகி விடும் என்பதால் அதனை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. திருமண வைபவங்கள் குறைவாக உள்ளதாலும் புரட்டாசி மாதம் கோவில் திருவிழா மற்றும் நவராத்திரிக்காக மட்டுமே குறைந்த அளவு பூக்கள் விற்பனையாகிறது.

    கன மழை காரணமாக பல வியாபாரிகளும் மார்க்கெட் வருவதை நிறுத்தி விட்டனர். இதனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால்தான் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மழைக்காலம் முடியும்வரை இதே நிலை தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

    ×