search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flu prevention camp on"

    • சனிக்கிழமைகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 42 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக முழுவதும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது.

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    அதன்படி வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஒவ்வொரு வாரமும் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையம், நகர்ப்புற நிலைய அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.

    முகாமில் பங்கேற்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்ப ட்டு தேவையான மாத்திரை மருந்து வழங்கப்பட்டு வந்தது.

    தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பால் அவதிப்ப ட்டவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த காய்ச்சல் முகம் வரும் டிசம்பர் 31-ந் தேதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இந்த அறிவிப்பை மாற்றி பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமைகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை 42 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என சுகாதா ரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ×