search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foot Ball"

    • என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை.
    • நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன்.

    இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவானாக சுனில் சேத்ரி விளங்கி வருகிறார். இவர் திடீரென நேற்று சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    39 வயதான இவர் இந்திய அணிக்காக 19 வருடங்கள் விளையாடி 150 போட்டிகளில் 94 கோல்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரரும் ஆவார். ஜூன் 6-ந்தேதி இந்திய அணி குவைத் அணிக்கெதிராக விளையாடுகிறது. இதுதான் அவருடைய கடைசி போட்டியாகும்.

    இந்த நிலையில் ஓய்வு முடிவை எடுத்தது குறித்து சுனில் சேத்ரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை. நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன். கடினமாக பயிற்சி மேற்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இந்த முடிவு மனநிலை அம்சங்கள் தொடர்பாக வந்தது.

    ஓய்வு முடிவு உள்ளுணர்வாக வந்தது. ஒரு வருடம் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுவேன். அதன்பின் எவ்வளவு காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியாது. அதன்பின் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.

    பயிற்சியாளராக ஆவது குறித்து நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அது குறித்து எனது ஓய்வு காலத்தில் யோசிப்பேன். தற்போது என்னுடைய எண்ணத்தில் அது இல்லை.

    இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரை தவிர்த்து, விராட் கோலியிடம் எனது ஓய்வு குறித்து தெரிவித்தேன். அவர் எனக்கு மிகவம் நெருக்கமானவர். அவர் என்னை புரிந்து கொள்கிறார்.

    இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

    • பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.

    9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

    இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.

    பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஆன பீலே, தனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். #Messi #Ronaldo #Pele
    கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்பவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார். நான் அணியை தேர்வு செய்தால் மெஸ்சிக்குதான் இடம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).



    நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் தனக்கு இருந்த பங்குகளை டெண்டுல்கர் சமீபத்தில் விற்ற நிலையில், அதனை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #KeralaBlasters #SachinTendulkar #Mohanlal
    திருவனந்தபுரம்:

    இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருந்தனர்.

    20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார். சமீபத்தில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றினார்.

    இந்நிலையில், இந்த பங்குகளை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக அணியின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், அணியின் நல்லெண்ண தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் நேற்று நடந்த ஜெர்சி அறிமுக விழாவிலும் அவர் கலந்து கொண்டு ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். 
    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையில் 20 சதவிகித பங்குகளை வைத்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது அதை வேறு ஒருவருக்கு கைமாற்றியுள்ளார். #KeralaBlasters #SachinTendulkar
    மும்பை:

    இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர். 

    20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றியுள்ளார். 

    ஹைபர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களை அதிகளவில் வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு இந்த பங்குகளை சச்சின் டெண்டுல்கர் விற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    ×