என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "for Cauvery"
- ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
- இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.
அம்மாப்பேட்டை:
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.
இதனால் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநில ங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை க்கு சுமார் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு மேல் உள்ளதால் அணைக்கு வரும் தணணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக திறந்து விடப்படும் உபரி நீர் செக்கானூர் கதவணை, நெரிஞ்சிப்பேட்டை கதவணை, கோனே–ரிப்பட்டி உள்ளிட்ட கதவணைகளில் அப்படியே வெளி யேற்றுவார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டை தேர்வீதி,பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் திடீரென வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி காவிரி ஆற்றை பார்த்தனர்.
அப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது நெரிஞ்சிப்பேட்டை கதவணை திறப்பது வழக்கம். ஆனால் கதவணையில் தண்ணீர் திறக்கப்படாதது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தாசில்தார் கதவணை மின்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின் கதவுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஊருக்குள் புகந்த தண்ணீர் வடிய தொடங்கியது . இதனால் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறும் போது, மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட தண்ணீர் அதே மட்டத்தில் தான் செல்லும். ஆனால் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் பொழுது வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக நெரிஞ்சி ப்பேட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படாதால் தான் தண்ணீர் ஊருக்குள் போகிறது என்று அறிந்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினோம்.
உடனடியாக அதிகாரிகள் கதவுகளை திறந்ததால் ஊருக்குள் போகும் தண்ணீர் வடிய தொடங்கியது. காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதையொட்டி காரையோர பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஈரோடு அக்ரகாரம் பேரேஜ், கருங்கல் பாளையம், வெண்டி–பாளையம், கொடிமுடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்