search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For help"

    • அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல‌வும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1.75 லட்சம் கனஅடியும், பவானியில் இருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், காவியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே பரமத்தி வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல‌வும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்களின் அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் 1077, காவல்துறை 100, தீயணைப்பு துறை 101, மருத்துவ உதவிக்கு 104, ஆம்புலன்ஸ் உதவி 108 ஆகியவற்றிற்கும், பரமத்தி வேலுார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 94450 00546 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

    ×