search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for selling alcohol"

    • அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானிசாகர், அம்மாபேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குறிச்சி டாஸ்மாக் கடை, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் கிட்டுசாமி (வயது 55),

    சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிலர் அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து, பெருந்துறை கருமாண்டிசெல்லி பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (37), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31), சத்தியமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (26), பவானி தொட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (44) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த அய்யாசாமி (40) என்பதும், அவரது மொபட்டை சோதனை செய்தபோது மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் அதிக லாபத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியசெம்மாண்டாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த சாமியப்பன் (80) என்பவரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் கருங்கல்பாளையம் கமலாநகரை சேர்ந்த சக்திவேல் (36) என்பதும், அவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு பவானிரோட்டில் மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புதுவயல் பகுதியை சேர்ந்த சாமிதுரையின் மகன் அரவிந்த் (23) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×