என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ford"
- தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
ஃபோர்டு நிறுவனத்தின் கோரிக்கையின்படி மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணையை தமிழ்நடு மாசு கட்டுப்பாடு வாரியம் புதுப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இசைவு வாணையை புதுப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.
இந்நிலையில், விண்ணப்பித்த பரிசீலனை செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைவு வாணையை 31.3.2028 வரை புதுப்பித்து அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் 2022ம் ஆண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- இந்திய சந்தையில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பிப்பு.
தமிழகத்தில் போர்ட் மோட்டார் நிறுவனம் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் போர்டு கார் தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளை சந்தித்து சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது, போர்ட் உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்று போர்டு கார் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் வழங்கி உள்ளது. அதன்படி, மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை போர்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக போர்ட் நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.
சென்னை மறைமலைநகர், குஜராத்தின் சனந்த் பகுதிகளில் செயல்பட்டு வந்த போர்ட் ஆலைகள் 2021ல் மூடப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#FORD IS BACK ?A year of constant interactions and consistent pitches under the guidance of our @cmotamilnadu Thiru @mkstalin avl have today resulted in the return of #FordMotorCompany to #TamilNadu ?Our CM's efforts to showcase TN's manufacturing prowess, its abundant… https://t.co/lanpPTNSMC pic.twitter.com/naJ0yptbjS
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 13, 2024
- ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.
- கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
- வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி.
சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டது, புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் என்டேவர் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது உள்ளிட்டவை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.
முன்னதாக இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், ஃபோர்டு மீண்டும் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனம் தற்போது தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஃபோர்டு எவரஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
2022-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் புதிதான ஒன்றாகவே இருக்கும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்டு நிறுவனம் புதிய என்டேவர் மாடலை சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது ஆண்டிற்கு 2500 யூனிட்கள் வரை இந்தியாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் தனது என்டேவர் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்படுகிறது. என்டேவர் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது.
இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் டாப் எண்ட் விலை ரூ. 60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என்டேவர் மாடல் ஃபார்ச்சூனருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். முன்னதாக ஃபோர்டு நிறுவனமும் நேரடியாக இறக்குமதி செய்து வாகனங்கள் விற்பனை செய்ய திட்டமிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.
- ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கியது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மறைமலை நகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தது ஃபோர்டு.
சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 726 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறைமலை நகரில் இருக்கிற ஆலையை வாங்க மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யு. குழுமம் மற்றும் ஃபோர்டு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், அதனையும் ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்தது.
இந்நிலையில், சென்னை ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை என்றும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு தொழிற்சாலையை, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஒரு ஆலையை ஏற்றுமதி தளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது ஃபோர்டு நிறுவனம். எனவே, இந்தியாவில் போர்ஃடு நிறுவனம் மீண்டும் போல்டாக செயல்பட உள்ளது.
- போர்டு நிறுவனம் ஏழாம் தலைமுறை மஸ்டங் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய போர்டு மஸ்டங் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது பாரம்பரியம் மிக்க மஸ்டங் மாடலின் ஏழாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரில் புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர், சக்திவாய்ந்த வி8 சேர்த்து இருவித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
போர்டு வரலாற்றில் முதல் முறையாக மஸ்டங் டார்க் ஹார்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது டிராக் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். இதில் அதிக செயல்திறன் வழங்கும் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது.
புதிய தலைமுறை மஸ்டங் மாடல் ஜிடி மற்றும் இகோபூஸ்ட் ட்ரிம் லெவல்களில் கூப் மற்றும் கன்வெர்டிபில் பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்டீரியர் டிசைன் 1960-க்களில் வெளிவந்த ஒரிஜினல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜிடி மற்றும் இகோபூஸ்ட் மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.
ஒட்டுமொத்தத்தில் புதிய மஸ்டங் ஹெக்சகன் வடிவ கிரில், பெரிய ஏர் இன்லெட்கள், மூன்று பார் எல்இடி ஹெட்லைட்கள், எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட பூட், கூர்மையான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மொத்தத்தில் 11 நிறங்களில் கிடைக்கிறது. இதில் வேப்பர் புளூ மற்றும் எல்லோ ஸ்பிலாஷ் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
ஏழாம் தலைமுறை போர்டு மஸ்டங் மாடல் 5.0 லிட்டர் கோயோட் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் கோல்டு ஏர் இண்டேக், டூயல் திராட்டில் பாடி டிசைன் மற்றும் அதிக ஏர்-ஃபுளோ ரேட்களை வழங்குகிறது. இத்துடன் 2.3 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட ட்வின் ஸ்கிரால், இகோபூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இகோபூஸ்ட் வெர்ஷனில் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், வி8 என்ஜினில் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்களின் செயல்திறன் பற்றி போர்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- போர்டு நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சனந்த் ஆலை பணிகளை போர்டு நிறுத்தியது.
போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து கடைசி கார் போர்டு இகோஸ்போர்ட் வெளியிடப்பட்டது. இந்த மாடல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் யூனிட் ஆகும். இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இதைத் தொடர்ந்து போர்டு நிறுவனம் உற்பத்தி பணிகளை மெல்ல நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் போர்டு சனந்த் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையில் இருந்து ஃபிரீஸ்டைல் மாடல் கடைசி யூனிட்-ஆக வெளியிடப்பட்டது. சென்னை ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் மீண்டும் பணிகளை தொடங்குவது பற்றி போர்டு நிறுவனம் இதுவரை எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. போர்டு நிறுவனம் தனது சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆலையும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தாண்டில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்ய ஃபோர்டு முடிவு செய்துள்ளது. புதிய மாடலில் முன்புற பம்பர், கிரில், முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்துமே மாற்றம் செய்யப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் உருவாகி வருவதாக தெரிகிறது. இத்துடன் டயமண்ட் கட் பினிஷுடன் 20 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
உள்புற இன்டீரியரிலும் மாறுதல்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்ஃபோடெயின்மென்ட் பகுதியில் இப்போது கூடுதலாக ஃபோர்டு சிங் 3 இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இது ஆப்பிள் கார் பிளே சேவைக்கு இணையான ஒன்றாகும். இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் வழங்கப்படுகிறது.
பாதசாரிகள் திடீரென காரை கடந்தால் அதை உணர்ந்து உடனடியாக பிரேக் தானாக செயல்படும் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்படுகிறது. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதை போன்று 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜினுடன் இவை வெளிவந்துள்ளன.
இவை பி.எஸ். VI (பாரத் புகை விதி 6) இணையாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின்கள் முறையே 180 பி.ஹெச்.பி. பவர் 420 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 213 பி.ஹெச்.பி. மற்றும் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய ஃபோர்டு எண்டேவர் கார் இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ், டொயோடா பார்ச்சூனர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட இசுஸூ எம்.யு.எக்ஸ். போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.#FordEndeavour #Car
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்