என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » forest elephants
நீங்கள் தேடியது "Forest elephants"
காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி சேரம்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்;
பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாகி விட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் எந்த நேரத்திலும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துவிடுமோ? என்ற பீதியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேரம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அதில், வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்து தர வேண்டும், ஆழமான அகழிகள் வெட்டப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள், பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் சுதர்சனன் நன்றி கூறினார். #tamilnews

×

X