search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former MLA Death"

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • அவரது உடலுக்கு அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரை சேர்ந்த வையாபுரி மனைவி ராஜம்மாள் (வயது 84).

    இவர் 1980-ல் அப்போதைய தலைவாசல் சட்டமன்ற தொகுதியில் (தற்போது கெங்கவல்லி) காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் மீண்டும் வெற்றி பெற்றார்.

    பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1989-ல் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் தலைவாசல் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பேரணாம்பட்டு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கனகதாரா மறைவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TNCM #OPS
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளரும், பேரணாம் பட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கனகதாரா மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரி கனகதாராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர். #TNCM #OPS

    ×