search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former soldiers"

    தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். #LSPolls
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பம் இருப்போர் பங்கேற்கலாம்.

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படை வீரர்கள் வரும் ஏப்ரல் 10-ந் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls
    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் அமர்ந்து 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ திரைப்படத்தை பார்த்து ரசித்தார். #NirmalaSitharaman #Uri
    பெங்களூரு:

    ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய உரி பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிரடி படையினர் கடந்த 2016-ம் ஆண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக ’துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்திவிட்டு, வெற்றிகரமாக திரும்பி வந்தனர். இந்திய வீரர்களின் இந்த சாகசத்தை மையமாக வைத்து  ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’  என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாரானது.

    பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் வீரர்களுடன் அமர்ந்து  பார்த்து ரசித்தார்.

    முன்னதாக, பெலன்டுர் பகுதியில் உள்ள சென்ட்ரல் ஸ்பிரிட் மாலுக்கு படம் பார்க்கவந்த நிர்மலா சீதாராமனுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman  #Uri  
    ×