search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "full length statue"

    • பரமக்குடி ஓட்டப்பாலம் ரவுண்டாணாவில் இமானுவேல் சேகரனுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும்.
    • தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பரம்பை பாலா ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ஏழை, எளிய மக்களின் மீதான தீய ஆதிக்க சக்திகளின் நீதிக்கு புறம்பான வன்முறைகளையும் தீமைகளையும் எதிர்த்து தடுத்து நிறுத்தி அனைத்து தரப்பு மக்களின் நல்லிணக்கத்திற்காகவும் நல் வாழ்விற்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு வெண்கல முழு உருவ சிலையை பரமக்குடி ஓட்ட பாலம் புதிய ரவுண்டானா பகுதியில் நிறுவ வேண்டும். இமானுவேல் சேகரன் சிலையை அங்கு அமையச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    மேலும் இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை எஸ.சி.பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக ராமநாதபுரம் கலெக்டரிடம் கொடுத்துள்ளோம்.

    அவர் எங்கள் மனுவை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதிய ளித்துள்ளார். மாநில, மத்திய அரசு அலுவல கங்களில் இமானுவேல் சேகரன் படம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எங்கள் கோரிக்கையை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேட்டியின் போது தேவேந்திரர் பண்பாட்டுக் கழக செயலாளர் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி, நடுவர் மன்ற அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக 35 வாகனங்களில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஊர்வலமாக வந்து தலைவர் பரம்பை பாலா தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    ×