search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "function"

    • தோகைமலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • 20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் பயன்பெரும் 264 குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டனர்

     குளித்தலை,

    குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. கரூர் கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமாக தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள 112 பின்தங்கிய மாவட்டங்களில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது.

    வட்டாரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக கடந்த மாதம் 30-ந்தேதி அன்று காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து முதல் கட்டமாக தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சுபோசித் பரிவார் -போஷன் மீல்ஸ் என்ற தலைப்பில் மாவட்ட திட்ட அலுவலர் உமா சங்கர், தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து 6 மாதம் முடிந்து 181 வது நாள் ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு துணை உணவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து திட்ட அலுவலர் கள் விளக்கவுரை வழங்கப்பட்டது.

    20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் 264 பயனாளிகளுக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,நிகழ்ச்சியில் ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு அறிமுகப்படுத்தப்பட்டு தாய்மார்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் வழங்கினார். தொடர்ந்து தோகைமலை பகுதிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • பெரம்பலூரில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ஜெயராமன் தலைமை வகித்தார். தேவராஜன் மருத்துவமனை டாக்டர் புவனேஸ்வரி முன்னிலை வகித்து தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்து பேசினார். பின்னர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தற்கொலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் உதரம் நாகராஜ், லதா உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கறம்பக்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • திமுக நகர செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க செயல்பாடு அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளருமான உ முருகேசன் தலைமை வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலை குழுவினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துதல் மேலும் மழைநீர் சேகரிப்பு சுற்றுப்புற தூய்மை மற்றும் கழிப்பறை பயன்பாடுகள் குறித்தும் கலை குழுவினர் சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருச்சி நடந்த ஹேப்பி ரோடு நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்
    • அமைச்சர்கள் நேரு, மகேஸ் தொடங்கி வைத்தனர்

    திருச்சி,

    திருச்சியில் கோர்ட் அருகே உள்ள ஸ்டுடென்ட் சாலையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட "ஹேப்பி சாலை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் சத்யபிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும், மாணவ மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்

    • பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது
    • பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் குடும்ப விழா, சாசன தினவிழா, முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். சங்க சாசன தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஷேக் தாவுத், மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நலதிட்டங்களை வழங்கினார்கள். பெரம்பலூர் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். . நிகழ்ச்சில் பெரம்பலூர் அரிமா சங்கம், பெரம்பலூர் சென்டினியல், பெரம்பலூர் ராயல் சென்டினியல், வாலிகண்டபுரம் சென்டினியல், பெரம்பலூர் சுப்ரீம், ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் , வைரிச்செட்டிபாளையம் அரிமா சங்க நிர்வாகிகள் உள்பட பல சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    சாத்தான்குளம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழாவையொட்டி விளக்கு பூஜை நடந்தது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் கரிசல் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

    தொடர்ந்து யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், முத்தாரம்மன், மாரியம்மன், பெரியம்மன், உஜ்ஜினியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேம் நடந்தது.  சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானம் நடந்தது. 

    இரவு 7 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 2-வது நாள்  வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது. 

    மஞ்சள் பெட்டி ஊர்வலமும், சிறப்பு அலங்கார பூஜையும்,கும்பம் தெரு வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 3-வது நாள் வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. 

    இரவு 7 மணிக்கு நாட்டில் நல்ல கன மழை வேண்டி 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை அம்பிகை தாசன் ஆர்.ஜி.பாலன் நடத்தினார். 

    இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. 4-வது நாள் கொடை விழா நிறைவு பூஜையும், வரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கொடை விழா குழுவினர் மற்றும் கரிசல் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளர் என். பெரியசாமியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி  போல்பேட்டை உள்ள அவரது நினைவு இல்லத்தில் அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கீதா முருகேசன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாணவரணி துணை அமைப்பாளரும் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, 

    பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன்,  நிர்மல்ராஜ், பொறியாளர் அணி  அமைப்பாளர் அன்பழகன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி,  கவுன்சிலர்கள் இசக்கி  ராஜா, கந்தசாமி, பொன்னப்பன், வட்ட செய லாளர் ரவீந்திரன், கீதா செல்வ மாரியப்பன்,மற்றும் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் பங்கேற்றார்.
    நெல்லை:

    குமரி மாவட்டம் உடையப்பன் குடியிருப்பில் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா  நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்ன தர்மத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் அய்யாவழி சுரேஷ், முத்தூர் ஊராட்சி கழக செயலாளர் முத்தூர் நைனார், பாளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், தருவை   கிளை செயலாளர் செல்லத்துரை மற்றும் அய்யாவழி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    அம்பை வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
    நெல்லை:

    அம்பை வட்டார இல்லம் தேடிக்கல்வி திட்டம் 100 நாள் நிறைவு கொண்டாட்டம், கல்வி கண்காட்சியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கும் விழா, அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பி.எல்.டபிள்யூ.ஏ. தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    நெல்லை  மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.

    சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் ரெஷினி, அம்பை வட்டாரக்கல்வி அலுவலர் ராணி,  வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்த்திசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர் ஜெயக்குமார் வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் சோமசுந்தரி, தீபா, உஷாராணி, பஷீரா பீவி ஆகியோர் என்னை கவர்ந்த இல்லம் தேடிக்கல்வி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.   மாணவர்களின் சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்பை ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் பிலிப், ஆபேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் ஆசிரிய பயிற்றுநர்கள் மாதாங்கனி, திருவளர் செல்வி, பிரியதர்ஷினி, பள்ளி தலைமை ஆசிரியர் எத்தல் அந்தாதி லதா மற்றும் அம்பை ஒன்றிய தன்னார்வலர்கள் 234 பேர் கலந்து கொண்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    நெல்லை:


    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா  விற்காக  கால் நாட்டுதல் நிகழ்ச்சி   இன்று நடந்தது. 

    விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
     
    அதனைத் தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    ஆனிப் பெருந்திருவிழா வின் தொடக்க நிகழ்ச்சியான புட்டபர்த்தி அம்மன் கோவில் திருவிழா வருகிற 5-ம் தேதியும், விநாயகர் திருவிழா 15-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

    ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 

    ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்  ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    • 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
    • வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிவகிரி:

    சிவகிரியில் உள்ள திரவுபதி அம்மன்கோவிலில் நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி இல்லத்து பிள்ளைமார் தெருவை சேர்ந்த சரோஜா(வயது 48) என்ற பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதேபோல் சிவகிரி குமாரபுரம் மேலத்தெருவை சேர்ந்த பாஞ்சாலி(45) என்பவரிடம் 5 பவுன், வாசுதேவநல்லூரை சேர்ந்த சுந்தரி(65) என்பவரிடம் 2 பவுன், சிவகிரி மலைகோவில் ரோட்டை சேர்ந்த பாஞ்சாலி(25) என்பவரிடம் 3 பவுன் என மொத்தம் 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அவர்கள் சிவகிரி போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கோவிலுக்கு வந்திருந்த வடமாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்குவதற்காக இன்று காலை விநாயகர் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து திருவிழா அழைப்பிதழ் தயாரித்தல், கோவிலில் பந்தல் அமைத்தல், மின் அலங்காரம், உள், வெளி பிரகாரங்கள் சுத்தப்படுத்துதல், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களை பாதுகாக்க வேண்டி கொட்டகைகளை பிரித்து எடுத்தல், தேர்களை சுத்தப்படுத்துதல், தேர் அலங்கார பணிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் முதல் மூவர் உற்சவமும், 26 முதல் ஜூலை 2-ந்தேதி வரை 7 நாட்கள் சந்திரசேகர் உற்சவமும் நடைபெறும்.

    வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் தேர் கால் நாட்டுதல் நடக்கிறது.

    தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ரத ஊர்வலமும் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் ரத வீதிகளில் வலம் வரும்.

    10-ம் திருவிழா அன்று சுவாமி, அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவியருக்கு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சோமாஸ்காந்தர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×