search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "futile"

    • சேலம் ஏ.வி.ஆர். கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம்:

    சேலம் ஏ.வி.ஆர். கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நரசிம்மன் மகன் பழனிசாமி (வயது 65) என்பது தெரிய வந்தது. எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது தெரியவில்லை.

    இவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.
    • இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நாமக்கல்:

    நல்லிபாளையம் காவல் நிலையம் பாப்பநாயக்கன்பட்டி கருங்கல் பாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ். இவர்தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு கஸ்தூரியின் தந்தை சுந்தரம் உள்ளிட்ட 6 பேர், பிரகாஷ் வீட்டிற்கு சென்று கவிதாவுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு வேண்டும் என்று கேட்டனர்.

    அப்போது பிரகாஷின் தாய் பழனியம்மாள் தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×