என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "G20 Virtual Summit"
- போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டது.
- இஸ்ரேல் மந்திரி சபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியது.
புதுடெல்லி:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. இருதரப்பிலும் பிணைக்கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இஸ்ரேல் மந்திரி சபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியதால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டை இந்தியா இன்று நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி வழியே இந்த மாநாடு நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது வரவேற்புக்கு உரியது. அனைத்து பிணைக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்தப் பகுதியில் கொல்லப்பட்டாலும் அது கண்டனத்திற்குரியது. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவ கூடிய ஸ்திரத்தன்மையற்ற நிலை கவலை அளிக்கிறது என தெரிவித்தார்.