என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganesha"
- அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள்.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானது.
சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி' விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
அங்காரக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளக்குகிறது.
பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள்.
அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.
குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்வாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.
உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.
அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.
அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.
அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.
எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.
அங்காரகனால் தொடங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம்.
கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.
- 'ப்ரஸந்த வதந' நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது.
- இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் 'சுக்லாம்பரதரம்' சொல்வோம்.
இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த ஸ்லோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
'சுக்லாம்பரதர' & வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். 'சசிவர்ண' நிலா மாதிரி நிறம் உடையவர்.
'சதுர்புஜ' நான்கு கை உள்ளவர்.
'ப்ரஸந்த வதந' நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது.
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.
மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன.
அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது.
மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.
'உ' என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம்.
முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன்.
ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.
ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.
- அவருக்காக செய்யப்படும் விதம், விதமான அலங்காரங்கள் வித்தியாசமானவை.
- அவருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் வித்தியாசமானவை.
தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாய் வணங்கப்படப் படுபவர் விநாயகர். அதனால் தான் அவரை "முதல் கடவுள்" என்கிறோம்.
ஒரு காலத்தில் "கணாதிபத்யம்" என்ற பெயரில் தனி சமயமாக விநாயகர் வழிபாடு இருந்தது.
அனைத்து தெய்வங்களின் வழிபாடு ஒருங்கிணைக்கப்பட்ட போது தனக்கென உள்ள ஆலயத்தில் முதன்மை தெய்வமாகவும், சிவன் கோவில்களில் பரிவார தெய்வமாகவும், பெருமாள் கோவில்களில் பாதுகாப்பு தெய்வமாகவும் விநாயகர் வணங்கப்படுகிறார்.
விநாயகருக்கு ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழா பிரசித்திமானது.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ந்தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் திங்கட்கிழமை பிறந்தவர்.
அன்று அவருக்கு நடத்தப்படும் வழிபாடுகள் வித்தியாச மானவை. ஏனெனில் விநாயகரே வித்தியாசமானவர்தான்.
அவரது உருவத் தோற்றம் மனித உடல் யானை தலையுடன் வித்தியாசமானது. அவரை தோப்பு கரணம் போட்டு, தலையில் குட்டி நாம் செய்யும் வழிபாடு வித்தியாசமானது.
அவருக்காக செய்யப்படும் விதம், விதமான அலங்காரங்கள் வித்தியாசமானவை.
அவருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் வித்தியாசமானவை. மொத்தத்தில் விநாயகர் வழிபாடு வித்தியாசங்கள் நிறைந்ததாக இருப்பது தெரியும்.
விநாயகரை எந்த இடத்திலும் நிறுவி வழிபடலாம். எந்த அளவிலும் செய்து வழிபடலாம்.
- கடனை அடைக்கும் எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.
- இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.
நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.
கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும்.
அந்த எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.
இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.
வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,
"ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹ§ம் நம்; பட்ஸ்வாஹா" என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.
"ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹ§ம் நம், பட் ஸ்வாஹா" என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும்.
சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.
மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.
அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடன் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
- சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
- அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.
விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.
சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.
எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.
தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
- பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.
- கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.
இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான்.
அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக மாற சாபம் தந்தார்.
எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். பராசர முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான்.
பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.
கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.
அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு "மூஷிக வாகனன்" என்று பெயர் வந்தது.
உகந்த இலைகள்
முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்ணு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.
- பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.
- நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.
தலை என்பது மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளை தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத் தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜ போக வாழ்வு கிடைக்கும்.-அபிராமி பட்டர்.
உருவ தத்துவம்
பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.
நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.
சதுரமான பகுதி -பூமி
வட்டமான பகுதி -நீர்
முக்கோணப்பகுதி -தீ
அரைவட்டப் பகுதி -காற்று
நடுவே வளைந்த கோடு-ஆகாயம்
- விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.
- இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.
அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.
பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது.
எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.
கிராமத்தில் இருப்பவர்கள் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தை சுற்றி பிள்ளையாரை வணங்கி செல்வதால் அவர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் பெரும்பாலும் வருவதில்லை.
விநாயகரும் 5 விதமான மரங்களும்
விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.
இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.
இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூத தத்துவத்தை விளக்குகிறது.
அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும்.
இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.
- நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.
- அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்திணைப் பொருள்.
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன.
நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.
அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்திணைப் பொருள்.
மனிதர் உயர்திணை. ஆக, அக்திணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறை கொண்டதால் பூதங்களை உள்ளடக்கியவர்.
அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
- எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.
- வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.
விநாயகரின் உருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளை சலவைக்கல், முத்து, பவழம், யானை தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைத்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.
அந்த பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயக பெருமானின் பலவித பெயர்களை சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தை சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது.
எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியை பெற்றுத் தரும்.
எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.
வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.
குழந்தை சவுபாக்கியத்துடன் அனைத்து கலைஞானமும் பெற்று ஆரோக்கியமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.
- விநாயகர் சிலையை பட்டீஸ்வரத்திற்கு எடுத்து செல்ல பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.
- இறுதியில் அங்கேயே விநாயக பெருமான் கலியுக கர்ணாமூர்த்தியாக அருள் புரிந்து வருகிறார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பண்டீஸ்வர சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.
அப்போது வண்டியின் அச்சு முறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளி இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.
விநாயகர் சிலையை பட்டீஸ்வரத்திற்கு எடுத்து செல்ல பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.
இறுதியில் அங்கேயே விநாயக பெருமான் கலியுக கர்ணாமூர்த்தியாக அருள் புரிந்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்