search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganthi Birthday"

    • தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
    • தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தீபாவளி முடியும் வரை செயல்படும்.

    நெல்லை:

    மகாத்மா காந்தியடி களின் 155-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சிறப்பு விற்பனை

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    மகாத்மா காந்தியடி களால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டு மென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.

    இந்த வாரியத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பாளையில் கதர் அங்காடி, காலணி உற்பத்தி அலகும், பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகும், வீரவநல்லூரில் 5 கைத்தரிகளும் இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்பட்டும் காந்தியின் கொள்கையிளை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2022-2023-ம் ஆண்டிற்கு ரூ.46.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.34.05 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் ரூ.28.50 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    காந்தி பிறந்த நாளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி கள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் இன்று முதல் தீபாவளி முடியும் வரை செயல்படும். மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேனி, குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பணை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் பாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, கண்காணிப்பாளர் சரவணராஜா, கதர் அங்காடி மேலாளர் ஜானி சாமுவேல், உதவி இயக்குநர், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×