search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gas Price Increase"

    • தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி நாடார் எம்.எல்.ஏ. பேசுகையில், மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வஞ்சிக்கும் விதமாகவும், அதானி, அம்பானி சம்பாதிக்கவும்,அவர்கள் லாபத்தை அதிகரிக்கவும் சமையல் எரிவாயு விலையை அடிக்கடி உயர்த்தி கொண்டே செல்கின்றது மத்திய அரசு. அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அனைத்து பொருட்கள் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

    மத்திய அரசு பணக்கார ர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த பொழுதே கடந்த காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்காக மிக குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயுவை விற்பனை செய்தது. அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் பெட்ரோல்,டீசல் மற்றும் கியாஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைத்து, ஏழை மக்கள் வாழ்வு உயர வழிவகை செய்யப்படும் என பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×