search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Giant Wave"

    • மகேஷா தனது நண்பர்களுடன் கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்து சென்றது.
    • இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    வானூர்:

    உத்தரபிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்தவர் துளசிதாஸ். அவரது மகன் மகேஷா. பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் 7 பேருடன் புதுவைக்கு வந்தார்.

    இவர்கள் கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் மகேஷா தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள கடலில் குளித்தார். அப்போது எழும்பி வந்த ராட்சத அலை மகேஷாவை இழுத்து சென்றது.

    அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்‌.
    • இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

     கடலூர்:

    வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தற்போது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்‌. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 49 மீனவ கிராமங்கள் இருந்து வருகின்றன‌. இதன் காரணமாக மாண்டஸ் புயல் உருவானது முதல் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் ஓரமாக உள்ள அனைத்து படகு களையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது. வழக்கத்தை விட அதிக அளவில் கடல் அலை சீற்றம் காணப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது‌. மேலும் காற்று அதிக அளவில் வீசினால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க வேண்டும்‌‌. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது‌. மேலும் கடல் பகுதியில் சுமார் 14 அடி உயரத்திற்கு கடல் அலை ராட்சத அலையாக மாறி கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றன. அதன் காரணமாக சுமார் 50 அடி முதல் 60 அடி கடல் அலைகள் முன்னோக்கி வந்து செல்வதால் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள படகுகள் அனைத்தையும் காலை முதல் மீனவர்கள் ஊர் பகுதிக்கு டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் அலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ராட்சத அலை மற்றும் கடல் நீர் முன்னோக்கி வந்து செல்வதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×