search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gift to Students"

    • மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • மாணவகளுக்கு பரிசளிப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ். நிஷா தலைமை தாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியபோட்டி, பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடந்த இரண்டு வருடத்தில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 83 ஆயிரத்து 386 லிட்டர் சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சாரயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    50 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வெளி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நண்டலாறு, நல்லாடை, ஆயப்பாடி ஆகிய இடங்களில் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்தால் அதனை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிதாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண் 9626169492 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முடிவில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணைக் கண்கா ணிப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

    ×