search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl bathing"

    • மனைவி வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருக்கும் பால்ராபின்சன் பெண்களின் குளியல் மற்றும் நிர்வாண வீடியோக்களை பார்த்து ரசித்து வந்ததாக கூறியுள்ளார்.
    • இந்த வீடியோக்களை காட்டி அவர் பெண்களிடம் பணம் பறித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டுக்குள் சுவர் ஏறிகுதித்து இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தீவிர விசாரணை நடத்தினார். இதில் அவர் பாளை ராஜேந்திர நகரை சேர்ந்த பால்ராபின்சன் (வயது 35) என்பது தெரியவந்தது.

    சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்த இவர் கொரோனா காலத்தில் நெல்லை வந்துள்ளார். சமீபகாலமாக இவர் பகல் நேரங்களில் தெரு, தெருவாக சென்று அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு காமிரா இருக்கிறதா? நாய்கள் இருக்கிறதா? என்பதை நோட்டமிட்டுள்ளார்.

    பின்னர் இரவு நேரங்களில் வீடுகளின் காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி குதித்து குளியல் மற்றும் கழிப்பறைகளில் ஜன்னல் வழியாக செல்போனில் பெண்களை வீடியோ எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பால்ராபின்சன் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருந்தன. இதில் சில சிறுமிகள், வயதான பெண்களின் காட்சிகளும் இருந்துள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடந்த 3 மாதங்களாக இதுபோன்று பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.

    இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருக்கும் பால்ராபின்சன் பெண்களின் குளியல் மற்றும் நிர்வாண வீடியோக்களை பார்த்து ரசித்து வந்ததாக கூறியுள்ளார்.அவரது செல்போனில் 500 க்கும் மேற்பட்ட பெண்களின் குளியல் காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த காட்சிகளை அவர் வேறு யாருக்காவது அனுப்பி உள்ளாரா என விசாரணை நடத்தினர். மேலும் இந்த வீடியோக்களை காட்டி அவர் பெண்களிடம் பணம் பறித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கைதான பால்ராபின்சனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனினும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ×