என் மலர்
நீங்கள் தேடியது "girl marriage"
- சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
- சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடி படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி 2 வீட்டு பெற்றோரும் பேசி முடிவெடுத்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்வது என்றும், நேற்று திருமணம் நடத்தலாம் எனவும் முடிவு செய்தனர்.
இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை 2 வீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 17 வயதிலேயே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக, காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலரான அமராவதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் யாசர், காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் அமராவதி, குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் கல்பனா ஆகியோர் திருணம் நடைபெறுவதாக வந்த திருமண மண்படத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சிறுமிக்கும், வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.
உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அதனை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது. அதற்குள் எப்படி திருமணம் செய்யலாம். 18 வயது முடிந்த பிறகே திருமணம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளதாகவும், சிறுமிக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் இது போன்று செய்யக்கூடாது என 2 வீட்டு பெற்றோருக்கும் அறிவுரை வழங்கி சென்றனர்.
- புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை செய்தனர்.
- வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி ராமன் (வயது31) விவசாயி. இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 2019-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
அதன் பிறகு மணப்பெண்ணை ஜானகி ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், புகார் அளித்த பெண் 16 வயது சிறுமி என்பதும், குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
அதன்பேரில் ஜானகி ராமன், அவரது தாய், தந்தை, சிறுமியின் தாய், தந்தை மற்றும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த உறவினர் பெண் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஜானகி ராமனுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், திருமணம் நடத்தி வைத்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஆகியோருக்கு குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் தலா, 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார்.
- உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு மலை கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை என்ற மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டாய திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை எனக்கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38) ஆகியோர் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்று இளம் வயதுள்ள சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் இந்த திருமணத்திற்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. 7 ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (வயது29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் உதவியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38), மற்றும் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுகட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு துாக்கி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்ற தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை மற்றும் மல்லேஷ் மனைவி முனியம்மாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- சிறுமியை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
அப்போது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பத்ரிநாத் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் பத்ரிநாத் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மருதமலை அடிவாரத்தில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த தனது தாயிடம் பத்ரிநாத் மாணவிக்கு 18-வயது கடந்து விட்டதாகவும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரையும் வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது பத்ரிநாத் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த போது மாணவி 18 வயதிற்கு முன்பே கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் பத்ரிநாத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
- சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் கணபதி(வயது 22). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு 2 பேரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த மே மாதம் 26-ந்தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சீதபற்பநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 2 பேரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
- அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.
ஈரோடு:
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 32 ). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் தண்டபாணி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி உள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார். சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இது குறித்து அந்த சிறுமிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை அவர் கூறினார்.
இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தண்டபாணியை பிடித்து விசாரித்த போது சிறுமிக்கு 16 வயதே ஆவது தெரியவந்தது.
இதை அடுத்து தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.
- அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராம் என்கிற தில்லை நாகரத்தின தீட்சிதர். அவரது மகன் பத்ரிசன், (வயது 19).
இவருக்கும், திருமண வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும் சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. சிறுமி தற்போது, 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதுகுறித்து குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.
இது குறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பத்ரிசன், இவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 6 பேர் தில்லைநாகரத்தினம் தீட்சிதர், பத்ரிசன் சகோதரர் சூர்யா தீட்சிதர், சிறுமியின் தந்தை ராஜகணேசன் தீட்சிதர், சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து உள்ளனர்.
இவர்களில் சூர்யா தீட்சிதரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
- சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆலம்பாடி அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது. 30) இவருக்கு விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இது குறித்து கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து (கார்மேகம் தந்தை சுப்பிரமணியன், இவரது மனைவி விஜயகுமாரி சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போக்சோ சட்டம் பாய்ந்தது
- போலீசார் கைது செய்து விசாரணை
போளூர்:
போளூர் அருகே உள்ள சேங்கபுத்தரி கிராமத்தைச் சேர்ந்த (17 வயது) ஆன இளம் பெண் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் மாலை அவர் வீட்டுக்கு வராதால் பல இடங்களில் அவர் தந்தை தேடினார்.
பின்னர் இது குறித்து போளூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் இளம்பெண்ணை கடத்தி சென்று கடந்த 30ஆம் தேதி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
- மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
- சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ்-1 படித்து முடித்துள்ள அவர் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்துவரும் அருண்பாண்டியன், வேலை விஷயமாக பாலையம்பட்டி வந்திருந்தபோது அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கத்தில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்றனர். அங்கு வாலிபர் அருண்பாண்டியன், சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
- பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
- இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
ஈரோடு:
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(32). இவர் ஈரோடு-மொடக்குறிச்சி வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வந்தார்.
அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி அவரது பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமேஷ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் ரமேஷ் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.