search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gnanakarai Swami Temple"

    • சாமக்கொடையில் ஞானக்கரை சுவாமி மற்றும் இதர பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறு கிறது.
    • நாளை (4-ந் தேதி) பகல் 10 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை பேரூராட்சி மணல்மேடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஞானக்கரை சுவாமி கோவில் கொடை விழா நேற்று தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    யாகசாலை பூஜை

    நேற்று முன்தினம் வேத ஆகம விதி முறைப்படி மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஞானக்கரை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    நேற்று இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அதைதொடர்ந்து ஞானக்கரை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு குடி அழைப்பு பூஜையும், அதை தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சாமக்கொடை

    இன்று மதியம் 12 மணிக்கு மதியக்கொடை நடைெபற்றது. இரவு 9 மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஞானக்கரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு நடைபெறும் சாமக்கொடையில் ஞானக்கரை சுவாமி மற்றும் இதர பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறு கிறது.

    நேர்த்தி கடன்

    அதை தொடர்ந்து மணல்மேடு வீதிகளில் ஊர்வலமாக வலம் வரும் சுவாமியை பொதுமக்கள் தரிசனம் செய்வார்கள். நாளை 4-ந் தேதி பகல் 10 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி, அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு ஆடல், பாடல், இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    கொடைவிழாவை முன்னிட்டு நாளை காலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு களை விழா கமிட்டியினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×