search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goddess Adiparashakti"

    • மார்பில் உரல் வைத்து இடித்து பிரசாதம் தயாரிப்பு
    • மொத்தம் ரூ. 21 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்தது

    கண்ணமங்கலம்:

    போளூர் ஒன்றியத்தில் சந்தவாசல் அடுத்த துரிஞ்சி குப்பம் கீழ்குளக்கரை 8 ஆதிபரா சக்தி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவில் பக்தரின் மார்பில் உரல் வைத்து இடித்து பிரசாதம் தயாரிக் கப்படும்.

    கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை எடுப்பார்கள். இந்த வடைகள் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஏலம் விடப்படும்.

    இந்த பிரசாதத்தை சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண் டாகும் என்பது ஐதீகம். அதன்படி ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் 23-ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நடந்தது. கடந்த வெள்ளியன்று அம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை அம்மனுக்கு ஆதிஹோமம், மகா அபிஷேகம், மஞ்சள் குடம் சமர்ப்பணம் நடைபெற்றது. மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையில் வடை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த வடையை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். முதலாவதாக சுட்ட வடை ரூ.4700, 2-வது வடை ரூ.3800, 3 மற்றும் 4-வது வடை ரூ.3,700, 5-வது வடை ரூ.3300, 6-வது வடை ரூ.1400, 7-வது வடை ரூ.1,300 என வடைகள் ஏலம் விட்டதில் மொத்தம் ரூ. 21 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்தது.

    மேலும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையின் எடைக்கு எடை துலாபாரம் செலுத்தி வழிபட்டனர்.

    பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் வீதி உலா வாண வேடிக்கையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×