search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goondas"

    • பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
    • சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

    சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • வள்ளியூர், அண்ணா நகரை சேர்ந்த நாராயண மூர்த்தி(வயது 26), தெற்கு வள்ளியூர், முத்துராஜ புரத்தை சேர்ந்த முருகேசன் (33) ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • இவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

    நெல்லை:

    வள்ளியூர், அண்ணா நகரை சேர்ந்த நாராயண மூர்த்தி(வயது 26), தெற்கு வள்ளியூர், முத்துராஜ புரத்தை சேர்ந்த முருகேசன் (33) ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பரிந்துரை செய்தனர்.

    அதை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில், நாராயணமூர்த்தி, முருகேசன் ஆகிய இருவரும் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    திசையன்விளை அருகே உள்ள இட்ட மொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் (வயது 22). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார். அதன்படி நாகலிங்கத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் இன்று நாகலிங்கம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×