என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government arts colleges"
- தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.
- தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானவுடன் உயர்கல்வியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
வழக்கம்போல பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கும், கலை அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கும் விண்ணப்பித்தனர்.
பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பி.காம். (பொது), பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகமாக உள்ளது. அரசு கலை கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் முன்கூட்டியே நல்ல பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்து வருகிறார்கள்.
164 அரசு கலை கல்லூரிகளில் சேர கடந்த 8-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், அரசு கலைகல்லூரிகளை நோக்கி வருகிறார்கள்.
பி.காம். உள்ளிட்ட குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இறுதி நாளாக இருப்பதால் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை நாடினர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.
நேற்று வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 780 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இன்று இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்ப தால் இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் என்று உயர் கல்வித்துறை எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என தனியார் நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர். நந்தகுமார் தெரிவித்துள்ளார். ஏழை பெற்றோர் இத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முக்கிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.
அதனை பெறுவதற்கு தாமதம் ஆவதால் குழந்தைகளை சேர்க்க கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
- கோவையில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
கோவை:
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.
நடப்பாண்டில், கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.இதனை யடுத்து, பி.ஏ.பி. காம். பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங் களை சமர்ப்பிக்க கடந்த 8-ம் தேதி வரை கடைசி என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வு முடிவுகள் வராத தால், கால அவகாசம் நீடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு தற்போது வரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகா சம் இருப்பதால் இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி தெரிவித் துள்ளார்.
மேலும், கல்லூரி யில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்காக இலவச விடுதி வசதியும் செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்